×

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஆன்லைனில் ஆர்டர் செய்த கேக்கை சாப்பிட்ட 10 வயது சிறுமி பலி: பஞ்சாப்பில் குடும்பமே சோகம்

பாட்டியாலா: பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஆன்லைனில் ஆர்டர் செய்த கேக்கை சாப்பிட்ட 10 வயது சிறுமி பலியானார். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியைச் சேர்ந்த மான்வி என்ற 10 வயது மாணவி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்தநாளுக்கு கேக் வாங்கியுள்ளார். குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடினார். இரவு 10 மணிக்குள் கேக்கை சாப்பிட்ட அனைவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனதாக மான்வியின் தாத்தா ஹர்பன் லால் தெரிவித்தார். மான்வியின் தம்பிகள் வாந்தி எடுத்தனர். மான்வி தனது தொண்டை வறண்டு விட்டதாக கூறி தண்ணீர் கேட்டார். பின்னர் சிறிது நேரத்தில் தூங்கி
விட்டார்.

மறுநாள் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஆன்லைனில் ஆர்டர் செய்த சாக்லேட் கேக்கில் விஷம் கலந்திருந்ததாகவும், அதுவே உயிரிழப்புக்குக் காரணம் என்றும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். குழந்தையின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், பேக்கரி உரிமையாளர் மீது ேபாலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். மேலும், மான்வியின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளதாகவும், கேக்கின் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆய்வு அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஆன்லைனில் ஆர்டர் செய்த கேக்கை சாப்பிட்ட 10 வயது சிறுமி பலி: பஞ்சாப்பில் குடும்பமே சோகம் appeared first on Dinakaran.

Tags : Punjab ,Patiala ,Manvi ,
× RELATED வேட்பாளரின் பிரசாரத்திற்கு...